“பெண்களின் பாதுகாப்பு குறித்த பயம் டிஜிட்டல் உலகிற்கும் பரவியுள்ளது” – ஜான்வி கபூர்!

பெண்களின் தனிப்பட்ட எல்லைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து நடிகை ஜான்வி கபூர் தனது சமூக வலைத்தளப் பதிவில் விரிவாக கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் எதிர்கொண்ட ஏஐ தொடர்பான வீடியோக்கள் மற்றும் தனது தொழில் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை விடவும், தற்போது பேசப்படும் விவகாரம் மிகவும் தீவிரமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பெண்ணாக வாழும்போது பிறரின் பார்வை, விமர்சனம், பாதுகாப்புக்கான தொடர்ச்சியான போராட்டம் மற்றும் தனிப்பட்ட எல்லைகள் மற்றவர்களால் தவறாக புரிந்துகொள்ளப்படுவது அல்லது மீறப்படுவது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக ஜான்வி தெரிவித்துள்ளார். பெண்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்கனவே இருக்கும் உடல் ரீதியான அச்சுறுத்தல்கள் தற்போது டிஜிட்டல் உலகிலும் உருவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு தீர்வாக பெண்களை மட்டும் பாதுகாக்க வேண்டும் என்பதுடன் நிறுத்திக்கொள்ள முடியாது என்றும், மற்றவர்களின் தனிப்பட்ட எல்லைகளை மீறுவது தங்களது உரிமை என நினைக்கும் மனநிலையிலேயே மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் ஜான்வி வலியுறுத்தியுள்ளார். எது சரி, எது தவறு என்பதை வெளிப்படையாக எடுத்துரைக்கும் பொறுப்பும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆண்களுக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் வலுவான நிலைப்பாட்டை எடுத்து அத்துமீறலை கண்டித்ததற்காக என்.டி.ஆர் மீது தனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துள்ள ஜான்வி, பிரபலங்கள் பேசும்போது அது இதுபோன்ற அனுபவங்களை எதிர்கொண்ட பெண்களுக்கு நம்பிக்கையையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என கூறியுள்ளார். மேலும், இதற்கு எதிராக குரல் கொடுத்த சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா மற்றும் குஷ்பூ ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading