எனக்கு ரூ.7 முதல் ரூ.8 கோடி சம்பளமா? – ஸ்ரீநிதி ஷெட்டி கொடுத்த விளக்கம்!

‘கே.ஜி.எஃப்.’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, தொடர்ந்து பல மொழி படங்களில் நடித்து வருகிறார். 2016ஆம் ஆண்டு ‘மிஸ் சுப்ராநேஷனல் இந்தியா’ பட்டத்தை வென்ற இவர், யாஷ் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எஃப்.’ படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் தனி கவனம் பெற்றார். ‘கே.ஜி.எஃப்.’ படங்களின் வெற்றிக்குப் பிறகு ஸ்ரீநிதி ஷெட்டிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் விக்ரமுடன் ‘கோப்ரா’, தெலுங்கில் நானியுடன் ‘ஹிட்: தி 3rd கேஸ்’ மற்றும் சமீபத்தில் ‘தெலுசு கதா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் ‘கே.ஜி.எஃப்.’ வெற்றிக்குப் பிறகு அதிக சம்பளம் கேட்பதாக வெளியான தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ரீநிதி, ரூ.7 முதல் ரூ.8 கோடி வரை சம்பளம் கேட்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல என்று தெரிவித்துள்ளார்.

தான் இதுவரை நடித்துள்ள திரைப்படங்களின் எண்ணிக்கையே குறைவு என்பதால், அந்த அளவுக்கு பெரிய தொகையை சம்பளமாக கேட்பது எப்படி சாத்தியமாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, தன்னைப் பற்றிய அந்த சம்பளத் தகவல் வெறும் வதந்திதான் என ஸ்ரீநிதி ஷெட்டி தெளிவுபடுத்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading