“மலையாள சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை” – சுருதி ஹாசன்!

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் சுருதி ஹாசன், நடிகையாக மட்டுமின்றி பாடகி மற்றும் இசையமைப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தமிழில் ‘7ஆம் அறிவு’, ‘3’, ‘பூஜை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், ‘சலார்’ திரைப்படத்தின் மூலம் பான் இந்திய அளவில் கவனம் பெற்றார்.

அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது துல்கர் சல்மானுடன் இணைந்து ‘ஆகாஷம் லோ ஒக்க தாரா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுருதி ஹாசனிடம் மலையாள சினிமாவில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மலையாள திரைப்படங்களை தான் மிகவும் விரும்பிப் பார்ப்பதாகவும், அந்தத் திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.சரியான கதாபாத்திரமும் கதையும் அமையும் பட்சத்தில் மலையாளத்தில் நடிக்கத் தயாராக இருப்பதாக சுருதி ஹாசன் கூறியுள்ளதால், அவரது மலையாள சினிமா அறிமுகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading