2024ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த கலைக்கூட உரிமையாளரான நிக்கோலாய் சச்தேவை திருமணம் செய்துகொண்ட வரலட்சுமி சரத்குமார், தனது திருமண வாழ்க்கை மற்றும் குழந்தைகள் குறித்த தனது கருத்துக்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுவதாக தெரிவித்துள்ள வரலட்சுமி, குழந்தைகளைப் பெறக்கூடிய சூழல் இல்லாததால் தான் நாங்கள குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுவது தவறு என தெளிவுபடுத்தியுள்ளார்.
தனக்கு குழந்தையை பெற்றெடுப்பதைவிட, அவர்களை பொறுப்புடன் வளர்ப்பதே பெற்றோரின் முக்கியமான கடமை என வரலட்சுமி கூறியுள்ளார். ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான விருப்பமும் அதற்கான பொறுப்பை ஏற்கும் மனநிலையும் இருந்தால்தான் ஒருவர் பெற்றோராக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிக்கோலாயின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகளைத் தனது சொந்த மகளாகவே பார்ப்பதாகவும் வரலட்சுமி தெரிவித்துள்ளார். தங்களது வீட்டில் வளர்க்கப்படும் இரண்டு செல்ல நாய்களுடன் தனக்கு மிகவும் நெருக்கமான பிணைப்பு இருப்பதாகவும், குழந்தைகள் மீது காட்டும் அன்பைவிட அவற்றின் மீது அதிக அன்பு வைத்திருப்பதாகவும் அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.
—
