தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களம் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை மையமாக வைத்து படங்களை உருவாக்கிய இயக்குநர்களில் முக்கியமானவர் பாலா. ‘சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கிய இவர், தனது படங்களுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
அவரது இயக்கத்தில் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ திரைப்படம் வெளியானது. எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம், கதையில் இடம்பெற்ற சில அம்சங்கள் காரணமாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், பாலாவின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து பாலா புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் இணைவது உறுதியானால், இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
—
