“நடிப்பா? இயக்கமா?” – இதற்கு பிறகுதான் முடிவு -ஜேசன் சஞ்சய் OPEN TALK!

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

நடிகை பரியா அப்துல்லா பேசுகையில், ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்தது நல்ல அனுபவமாக இருந்ததாகவும், படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஜேசன் சஞ்சய் பேசுகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னுடன் பயணித்த லைகா நிறுவனத்துக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். ‘சிக்மா’ படம் வெளியான நிலையில் இனிதான் தொடர்ந்து நடிப்பா அல்லது இயக்கமா என்பதை முடிவு செய்ய இருப்பதாக அவர் கூறினார். மேலும், படம் பார்த்த தனது அம்மா, தங்கை உள்ளிட்ட குடும்பத்தினர் தன்னை வாழ்த்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading