Advertisement

படப்பிடிப்பில் தவறி விழுந்த அமிதாப் பச்சன் – ‘KBC 18’ நிகழ்ச்சியில் அவரே பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

83 வயதான அமிதாப் பச்சன் நீண்ட காலமாக தொகுத்து வழங்கி வரும் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் 18வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கமாக நிகழ்ச்சியை நின்றபடி தொடங்கும் அவர், சமீபத்திய எபிசோடில் அமர்ந்தபடியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதற்கான காரணத்தை நிகழ்ச்சியிலேயே அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். முந்தைய நாள் படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் முழங்காலில் காயம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக எழுந்து நிற்பதில் சற்று சிரமம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதேசமயம், தனது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய திரையுலகில் பயணித்து வரும் அமிதாப் பச்சன், ‘ஷோலே’, ‘தீவார்’, ‘டான்’, ‘அமர் அக்பர் அந்தோணி’, ‘பிளாக்’, ‘பிகு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிப்புக்காக தேசிய திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். திரையுலகை தாண்டி ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி ரசிகர்களிடமும் தனி வரவேற்பை பெற்றுள்ள அமிதாப் பச்சன், தனது குரல் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பு பாணியால் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார்.

Add a Comment

Leave a Reply