இயக்குனராக என் புதிய பயணத்தை தொடங்குகிறேன்– ‘சிக்மா’ குறித்து ஜேசன் சஞ்சய் உருக்கமான பதிவு!

இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் சிக்மா படம் வெளியாகும் நிலையில், தன்னுடைய முதல் படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் ஜேசன் சஞ்சய் நன்றி தெரிவித்துள்ளார். தன் மீது நம்பிக்கை வைத்த சுபாஸ்கரன் மற்றும் தமிழ்குமரனுக்கும், கதையை நம்பி நடித்த சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் மற்றும் ராஜு மாஸ்டருக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

தனது எண்ணங்களுக்கு ஏற்ற வகையில் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்துடன் பணியாற்றியது அதிர்ஷ்டம் என்றும், எடிட்டர் பிரவீன் கே.எல். தனக்கு மிகப்பெரிய பலமாக இருந்ததாகவும் ஜேசன் தெரிவித்துள்ளார். அதேபோல் தமனின் இசையும் படத்தின் உற்சாகத்தை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வெங்கட் மற்றும் ஸ்டண்ட் சில்வா இணைந்து அமைத்த ஆக்‌ஷன் காட்சிகள் கதைக்கு தேவையான ஆற்றலை கொடுத்துள்ளதாக கூறியுள்ள ஜேசன், மொழி மற்றும் பிராந்திய எல்லைகளை கடந்து அனைத்து ரசிகர்களையும் சென்றடையும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநராக தனது பயணத்தை தொடங்கும் இந்த நேரத்தில் ரசிகர்களின் ஆதரவு மிகவும் முக்கியம் என கூறியுள்ள ஜேசன் சஞ்சய், அக்டோபர் 2ஆம் தேதி ‘சிக்மா’ படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading