“வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம்!” – ‘ஏழு கடல் ஏழு மலை’ குறித்து மாரி செல்வராஜ்

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் இன்று அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதையொட்டி இயக்குநர் மாரி செல்வராஜ் படத்தைப் பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

படத்தை ஏற்கனவே ஐந்து, ஆறு முறை பார்த்துவிட்டதாக கூறிய மாரி செல்வராஜ், ஒவ்வொரு முறையும் இயக்குநர் ராம் இந்த கதையை எப்படி சிந்தித்திருப்பார், மனிதர்களையும் சமூகத்தையும் எவ்வளவு ஆழமாக அணுகியிருப்பார் என்ற வியப்பும் கேள்விகளும் தனக்குள் எழுவதாக தெரிவித்துள்ளார். சினிமா என்பது வெறும் கொண்டாட்டத்திற்கானது மட்டுமல்லாமல், ஆழமான அமைதியையும் பேரிரைச்சலையும் உருவாக்கி பல கேள்விகளை எழுப்பக்கூடிய கலை வடிவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த அனுபவங்களை உள்ளடக்கிய படைப்பாகவே ‘ஏழு கடல் ஏழு மலை’ அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திரையரங்கில் படத்தை பார்க்கும்போது, அதில் வரும் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களுடன் பயணித்து, இயக்குநர் உருவாக்கியுள்ள கற்பனை உலகத்திற்குள் ரசிகர்களும் செல்வார்கள் என்றும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். தற்போது ‘மஞ்சனத்தி’ படப்பிடிப்பில் இருப்பதால் தன்னால் நேரடியாக திரையரங்கிற்கு செல்ல முடியவில்லை என்றும், ரசிகர்கள் இந்த அனுபவத்தை தவறவிடாமல் திரையரங்கில் படத்தை பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading