தென்னிந்திய திரையுலகில் கவனம் பெற்று வரும் பிரீத்தி முகுந்தன், ‘பிளாஸ்ட்’ படத்தில் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்ததை தொடர்ந்து, தற்போது அசோக் செல்வனுடன் ‘அன்பில் அவன்’ படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக தனுஷுடன் இணைந்து நடிக்கும் புதிய படத்திலும் அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
இந்த படத்தில் முதன்முறையாக மதுரை பெண்ணாக நடிப்பதாக கூறியுள்ள பிரீத்தி, அப்பகுதி மக்களின் பழக்கவழக்கங்களை அறிந்து வருவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆக்ஷன் கதாபாத்திரங்கள் தனக்கு பொருத்தமாக இருப்பதாக ரசிகர்களும், திரையுலகினரும் கூறுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகைகள் ஆக்ஷன் காட்சிகளில் ஈடுபடும்போதும் ரசிகர்கள் ரசிப்பது தனக்கு பெருமையாக இருப்பதாக கூறிய பிரீத்தி, விஜயசாந்தி போல ஆக்ஷன் கதாநாயகியாகவும், ஒரு லேடி சூப்பர்ஸ்டாராகவும் உருவாக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், வெறும் பெரிய ஹீரோக்களுடன் நடிப்பது அல்லது ‘பெரிய ஹீரோயின்’ என்ற இமேஜை உருவாக்குவது தனது நோக்கம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தான் நடிக்கும் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியம் என்றும், இமேஜை கருத்தில் கொண்டு கதைகளை தேர்வு செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
—
