Advertisement

‘ஜெயிலர் 2’ படத்தின் 12 பாடல்கள் அடங்கிய ஆல்பம் வெளியீடு !

ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 15-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்ரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள ‘ஜெயிலர் 2’ படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த 12 பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஆறு பாடல்களுக்கு சூப்பர் சுப்பு பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

ஏற்கனவே ‘அல்ல போலேலோ’, ‘ஒன் மூன்… ஒன் சன்’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், நோரா ஃபதேஹி நடனமாடிய ‘பிந்தாஸ்’ பாடலும் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து படத்தின் அடுத்த முக்கிய அப்டேட்டாக டிரெய்லர் வரும் 5-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply