அர்ஜுன் தாஸின் புதிய திரைப்படம் – தொடங்கியது புதிய படப்பிடிப்பு!

நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. ‘ஒன்ஸ்மோர்’ படத்தை தொடர்ந்து சில்வர் ட்ரீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக இப்படத்தை உருவாக்குகிறது.

இந்த படத்தின் மூலம் பிரீத்தி பகதாலா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அவர் நடிக்க, கே.எஸ். ரவிக்குமார், சரவணன், யோகி பாபு, பாலா சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

தங்களது முதல் தயாரிப்பிலேயே வித்தியாசமான கதைக்களத்துடன் திறமையான கலைஞர்களை இணைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. ரசிகர்கள் விரும்பும் பொழுதுபோக்கு அம்சங்களுடன், திரையரங்கில் செலவிடும் நேரத்திற்கும் பணத்திற்கும் முழுமையான திருப்தி அளிக்கும் வகையில் படத்தை உருவாக்கி வருவதாகவும் கூறியுள்ளனர். தற்போது படப்பிடிப்பு பணிகள் கவனமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் மேலும் சில தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading