விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவான ‘பத்தா’ படத்திற்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ள இப்படத்தில், குழந்தை நட்சத்திரம் சாய் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்க, இப்படத்தை இயக்குநர் அட்லீ தயாரித்துள்ளார்.
படத்தை பார்த்த ஷங்கர், மனிதநேயம், நகைச்சுவை மற்றும் ரசிகர்களை கைதட்ட வைக்கும் பல தருணங்களுடன் ‘பத்தா’ அழகான படமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக விஜய் சேதுபதியின் உணர்வுப்பூர்வமான நடிப்பையும், படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் க்ளோஸ்-அப் காட்சிகளையும் அவர் பாராட்டியுள்ளார்.
சிறுவன் சாய் பிரித்விராஜின் நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறிய ஷங்கர், அவர் தேசிய விருது பெறும் அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். லிஜோமோல் ஜோஸின் இயல்பான நடிப்பு மற்றும் சாய் அபயங்கரின் வழக்கத்திற்கு மாறான பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்பாவித்தனம் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த பல நெகிழ்ச்சியான காட்சிகள் படத்தில் இருப்பதாக கூறிய ஷங்கர், தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர் பாலாஜி தரணிதரனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘பத்தா’ அவரது மற்றொரு மறக்க முடியாத படைப்பு என்றும் பாராட்டியுள்ளார்.
—
