Advertisement

7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் நடிக்கும் காவ்யா!

தமிழில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‘அபிராமி’ தொடரில் காவ்யா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் பேசிய அவர், தமிழ் ரசிகர்களுக்கு தன்னை ‘மகாலட்சுமி’ தொடரின் மூலம் நன்கு தெரியும் என்றும், அந்தத் தொடர் நிறைவடைந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். சுமார் 900 நாட்கள் ஒளிபரப்பான ‘மகாலட்சுமி’ தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்ததாக கூறிய காவ்யா, தற்போது ‘அபிராமி’ கதாபாத்திரம் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ‘மகாலட்சுமி’ கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக ‘அபிராமி’ இருக்கும் என்றும், மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்தத் தொடர் குடும்பப் பெண்களை நிச்சயம் கவரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply