கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை நடிகர் சூர்யாவும் பாராட்டியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இதுவரை பேசப்படாத விஷயங்களை துணிச்சலுடன் இப்படம் எடுத்துரைப்பதாகவும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான் சொல்ல நினைத்ததை சிறப்பாக பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு உயிர் கொடுத்துள்ளதாக பாராட்டிய சூர்யா, இசைஞானி இளையராஜாவின் இசை மனதை நெகிழச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘டோரதி’ படக்குழுவினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
Add a Comment
