போட்காஸ்ட் நிகழ்ச்சி நடத்தும் சிரஞ்சீவி?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. சினிமாவைத் தாண்டி கடந்த 2017ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மீலோ எவரு கோடீஸ்வரடு’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியிருந்தார். அதன்பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக சிரஞ்சீவி போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக சிரஞ்சீவி குறித்த ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading