சன் தொலைக்காட்சியில் இதிகாசக் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் ‘அனுமன்’ தொடர் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் தொடர், ஆரம்பத்தில் வார நாட்களில் தினமும் ஒளிபரப்பானது. பின்னர் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில், மீண்டும் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, இனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை 30 நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add a Comment
