இசையமைப்பாளரும் பாடகருமான ஹிப்ஹாப் ஆதி, ‘மீசைய முருக்கு’ திரைப்படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்த அவர், படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான ‘மீசைய முருக்கு 2’வை உருவாக்கியுள்ளார். செப்டம்பர் 25ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், 4 நாட்களில் ரூ.51.3 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் இப்படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
Add a Comment
