பாரிசில் ஐஸ்வர்யா ராயின் ராயல் லுக் அண்ட் வாக்… வைரலாகும் வீடியோ!

பாரிஸ் ஃபேஷன் வீக்கில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஈபிள் கோபுரத்தை பின்னணியாகக் கொண்டு நடைபெற்ற பிரமாண்ட ஃபேஷன் நிகழ்ச்சியில் சர்வதேச அழகு பிராண்டின் தூதராக அவர் கலந்து கொண்டார்.

அடர் நிற வெல்வெட் உடையில் கம்பீரமான தோற்றத்தில் மேடையில் நடைபோட்ட ஐஸ்வர்யா ராய், தனது வழக்கமான நேர்த்தியுடன் ரசிகர்களை கவர்ந்தார். அதேசமயம், வித்தியாசமான கூந்தல் நிறத் தேர்விலும் அவர் தோன்றியிருந்தது கூடுதல் கவனத்தை பெற்றது.

இந்த சர்வதேச நிகழ்ச்சியில் கெண்டல் ஜென்னர், சிமோன் ஆஷ்லி, எவா லாங்கோரியா உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். அவர்களுடன் சர்வதேச பாடகி செலினே டியானும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியின் இறுதியில் மேடையில் ஒன்று கூடிய நட்சத்திரங்கள் உற்சாகமாக நடனமாடினர். அப்போது செலினே டியானை ஐஸ்வர்யா ராய் அன்புடன் கட்டிப்பிடித்ததுடன், அவருடன் கைகோர்த்து நடனமாடிய தருணங்களும் இடம்பெற்றன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Add a Comment

Leave a Reply