‘மிஸ்டர் பாரத்’ படத்தின் ‘பேடி ஃபெல்லா டி’ பாடல் வெளியானது!

திரைப்பட இயக்கத்தில் தனது முத்திரையைப் பதித்துவரும் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளராக தனது ஜிஸ்குவாட் நிறுவனம் மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார். அந்த வகையில் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அவர் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மிஸ்டர் பாரத்’.

‘மிஸ்டர் பாரத்’ படத்தில் பிரபல யூடியூபரான பாரத் கதாநாயகனாக நடித்துள்ளார். நிரஞ்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ‘கட்சி சேர’ பாடல் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, தற்போது ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் ‘பேடி ஃபெல்லா டி’ வீடியோ பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஈஸ்வர் சந்தனலட்சுமி எழுதிய பாடல் வரிகளுக்கு ஆஷ்லே ஜேசி குரல் கொடுத்துள்ளார்.

Add a Comment

Leave a Reply