ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு புரமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களையும் அனிருத் இன்று செப்டம்பர் 30ஆம் தேதி இசைக் கச்சேரி பாணியில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் இசை மீதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், தனது கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார். பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், தான் இடம்பெறும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ரஜினி பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களும், தனது தந்தை குறித்து அவர் பேசும் விஷயங்களும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் சிவராஜ்குமார் கூறியுள்ளார். ரஜினிகாந்த் மிகச்சிறந்த மனிதர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
