தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று (செப்., 26) நடைபெற்றது. இதற்கு முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சங்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களை பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சினிமா துறைக்கு எப்போதும் அரசு தரப்பில் தனி கவனம் இருக்கும் என்று தெரிவித்தார். இனி ஆண்டுதோறும் சினிமா விருதுகள் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதிக்கான நடைமுறைகள் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும், தேவையான விவரங்களுடன் அனுமதி கோரப்பட்டால் தானாகவே அனுமதி கிடைக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். அரசு ஓடிடி தளம் உருவாக்குவது குறித்து விரைவில் நல்ல செய்தி வரும்.
ஓடிடி வெளியீட்டுக்கான கால இடைவெளி மற்றும் பைரசி பிரச்னை தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதுகுறித்து முடிவெடுக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது என்றும், இடைத்தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி தீர்வு காண்போம்” என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
—
