“அன்பை மட்டுமே விதைப்போம்… ரசிகர்களிடம் சூர்யா டாக்!

சென்னை பரணிபுத்தூரில் நடைபெற்ற சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு ரசிகர்களிடம் உரையாற்றினார். அவர் பேசிய சில கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் மற்றும் பதிவுகளுக்கு பதிலளித்து தங்களது நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று சூர்யா அறிவுறுத்தினார்.

நடிகர் சூர்யா பேசுகையில், “அன்பை மட்டுமே விதைப்போம். சமூக ஊடகத்தில் ஒருவர் ஒரு பதிவை போட்டதற்காக நாமும் அதற்கு பதில் பேச ஆரம்பித்தால் நாம்தான் பாதிக்கப்படுவோம். நாம் நாமாகவே இருப்போம்; அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்” என்று கூறினார்.மேலும், மற்றவர்களை மாற்ற வேண்டும் அல்லது தங்களது கருத்தை புரிய வைக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்வது சில நேரங்களில் கடினமாகிவிடும் என்றும், அனைவராலும் நம்முடைய கருத்தை புரிந்துகொள்ள முடியாது என்றும் சூர்யா தெரிவித்தார்.

எனவே, தேவையற்ற விஷயங்களில் ரசிகர்கள் தங்களது ஆற்றலை செலவிடாமல், தங்களுக்கு பிடித்த விஷயங்களை நேர்மையாக தொடர்ந்து செய்து வர வேண்டும் என்றும், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.குறிப்பாக, சூர்யா ரசிகர் மன்றம் தொடர்பான அரசியல் வதந்திகளுக்கு அந்த அமைப்பு முன்னதாக விளக்கம் அளித்து, சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டிருந்தது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading