கவனம் ஈர்க்கும் ‘பந்தா கேங்க்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக்!

அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘பந்தா கேங்க்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் தினேஷ் மற்றும் நடிகை ஆனந்தி மீண்டும் இணைந்துள்ளனர். இதற்கு முன்பு இருவரும் ‘விசாரணை’ மற்றும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த கூட்டணியுடன் லிங்கேஷ் மற்றும் சமூக ஊடக பிரபலமான ஹரி முனியப்பன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். தினேஷின் திரைப்பயணத்தில் இது 26வது படமாகும். அறிமுக இயக்குநர் மதி ஆனந்த் இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார். வி6 ஃபிலிம்ஸ் சார்பில் வேலாயுதம்.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சத்யபிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், தற்போது ‘பந்தா கேங்க்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. புதிய தோற்றத்தில் தினேஷ் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading