‘பூதகாலம்’, ‘பிரம்மயுகம்’, ‘டீயஸ் ஐரே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராகுல் சதாசிவன், அடுத்ததாக பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியர் இணையும் புதிய ஹாரர் படத்தை இயக்குகிறார். ஹாரர் ஜானரில் கவனம் பெற்றுள்ள அவரது அடுத்த படைப்பாக இது உருவாகிறது.
நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘Odiyan – Age of Illusion’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் கதைக்களம் குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில், பிருத்விராஜ் மற்றும் மஞ்சு வாரியர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதற்கிடையே இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. ராகுல் சதாசிவனின் முந்தைய படைப்புகளைத் தொடர்ந்து, இந்தப் படமும் ஹாரர் பாணியில் உருவாக இருப்பதால் அவரது ரசிகர்கள் புதிய படத்தின் அப்டேட்களை எதிர்பார்த்து வருகின்றனர்.
