“மீண்டும் மீண்டும் நீ வெல்ல வேண்டும்”… சூரியை பாராட்டிய சமுத்திரக்கனி!

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. எல்ரட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

மீனவர்களின் வாழ்வியலை பின்னணியாகக் கொண்டு உருவான இப்படத்தின் மையக் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப் போட்டியைச் சுற்றி நகர்கிறது. குறிப்பாக கடலை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் காட்சிகளும் படகு போட்டி காட்சிகளும் படத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. வெளியானதைத் தொடர்ந்து ‘மண்டாடி’க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், திரைத்துறையினரிடையே பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் சமுத்திரக்கனி சூரியின் நடிப்பையும் படத்தின் வெற்றியையும் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘மண்டாடி’யின் வெற்றிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், சூரி மிகப்பெரிய சாதனையை செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சூரி தொடர்ந்து வெற்றிகளை பெற வேண்டும் என்றும், வாழ்க்கையில் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ள சமுத்திரக்கனி, படக்குழுவினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading