ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது.
படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், ஜேசன் சஞ்சய் கலந்து கொள்ளும் புரமோஷன் நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. இதில் தனது தந்தையும் நடிகருமான விஜய் குறித்து அவர் பகிர்ந்துள்ள சில தகவல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
விஜய் தற்போது தமிழக முதலமைச்சராக இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜேசன் சஞ்சய், தனது தந்தை ‘சிக்மா’ படத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, தனக்காக விஜய் ரசிகர்களை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து, “உங்கள் தந்தையிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்ட விஷயம் என்ன?” என்று கேட்கப்பட்டபோது, எந்த தயக்கமும் இல்லாமல் “நேரம் தவறாமை” என்று ஜேசன் சஞ்சய் பதிலளித்துள்ளார். அவரது இந்த பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
