‘பத்தா’ டீசர் வெளியானது.. எதிர்ப்பார்ப்பை தூண்டும் விஜய் சேதுபதியின் புதிய லுக்..!

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பாலாஜி தரணீதரன், நடிகர் விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘பத்தா’. இந்தப் படத்தில் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். 1980-களின் பின்னணியில் நடைபெறும் கதையாக இப்படம் உருவாகி வருவது ஏற்கனவே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இயக்குநர் அட்லி தயாரிக்கும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ‘பத்தா’ படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இதையடுத்து, படத்தில் இடம்பெற்றுள்ள ‘மகளே’ பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சூழலில், படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் 1980-களின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் காட்சிகளுடன் விஜய் சேதுபதியின் தோற்றமும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் குறித்த சில காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading