‘சீதா ராமம்’ திரைப்படத்தில் நூர்ஜஹான் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மிருணாள் தாக்குர். அந்தப் படத்திற்குப் பிறகு தொடர்ந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர், இந்திய அளவில் பிரபலமான நடிகையாகவும் ஹிந்தி திரையுலகில் முக்கியமான நட்சத்திரமாகவும் இருந்து வருகிறார்.
மிருணாள் தாக்குர் பிரபலமான நடிகையாக இருப்பதால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது பல்வேறு வதந்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷுடன் அவர் காதலில் இருப்பதாக தகவல்கள் பரவின. அதேபோல் கிரிக்கெட் வீரர் யஷஸ்வியுடன் மிருணாள் டேட்டிங் செய்வதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த ‘ராஜ ராஜ சோழன் நான்’ பாடலை ஒலிக்கவிட்டு, அதனுடன் இணைந்து மிருணாள் தாக்குர் தமிழிலேயே பாடிய வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் பாடலை அவர் பாடிய விதம் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
–
