‘சங்கமித்ரா’ படத்திற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் – சுந்தர் சி தகவல்!

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அடுத்தகட்டப் படங்கள் மற்றும் கனவுத் திரைப்படமான ‘சங்கமித்ரா’ குறித்து அவர் பேசியுள்ளார்.

நான் தமிழில் ‘அரண்மனை’, ‘மூக்குத்தி அம்மன்’ போன்ற பிரமாண்டமான படங்களை இயக்கி முடித்த பிறகு, அவற்றின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு அதிக காலம் தேவைப்படுவதாக சுந்தர் சி தெரிவித்துள்ளார். குறிப்பாக, ‘அரண்மனை 4’ மற்றும் ‘மூக்குத்தி அம்மன் 2’ ஆகிய படங்களுக்கு தலா ஒன்றரை ஆண்டுகள் செலவானதாகக் கூறியுள்ளார்.

இந்த இடைவெளியில் வேறு படங்களை இயக்க முடியாததால், தன்னைத் தேடி வரும் கதைகளில் பிடித்திருந்தால் நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் நடித்து முடித்துள்ள ஒரு திரைப்படம் குறித்த அறிவிப்பை அதன் தயாரிப்பு நிறுவனமே விரைவில் வெளியிடும் என்றும் கூறியுள்ளார். மேலும், தனது கனவுத் திரைப்படமான ‘சங்கமித்ரா’வை உருவாக்க குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் எனத் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும் சுந்தர் சி உறுதிப்படுத்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply