கமல்ஹாசன் நடிக்கும் ‘சண்டியர்’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

‘வீர தீர சூரன்’ படத்தை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் புதிய படத்தில் நடிக்கிறார். கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மதுரையைப் பின்னணியாகக் கொண்டு, ஆக்‌ஷன் நிறைந்த கிராமத்துக் கதையாக இப்படம் உருவாகிறது. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக கமல்ஹாசன் நடித்து இயக்கிய ‘விருமாண்டி’ படத்திற்கு முதலில் ‘சண்டியர்’ என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் ஏற்பட்ட எதிர்ப்புகள் காரணமாகப் படத்தின் தலைப்பு ‘விருமாண்டி’ என மாற்றப்பட்டது. தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனின் புதிய படத்திற்கு மீண்டும் ‘சண்டியர்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply