ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பிரம்மாண்டமான டீசர் !

நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது, இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கேசண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, துனியா விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் குஷ்பு சுந்தர் மற்றும் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரிப்பாளர்களாக உள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

ரஅதிகமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ‘ரைஸ் ஆப் மஹாச்தி’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த டீசரில் பிரம்மாண்டமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டீசர் வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது. வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading