விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபாலி’ டீசர் வெளியீடு – அக்டோபர் 16-ல் பிரம்மாண்ட ரிலீஸ்!

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் உருவாகி வரும் ‘ரணபாலி’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ‘மம்மி’ உள்ளிட்ட படங்களில் நடித்த அர்னால்ட் வோஸ்லூவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜய் – அதுல் இசையமைக்கின்றனர். பிரம்மாண்டமான பான்-இந்திய படமாக உருவாகும் ‘ரணபாலி’, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.கதையின் பின்னணி 1870-களில் நிலவிய பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் அந்தக் காலத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தைச் சுற்றி அமைந்துள்ளது. அந்த சூழலில் தனது மக்களை காப்பாற்றுவதற்காக போராட்டத்தில் களமிறங்கும் ஒரு புரட்சிகர வீரனை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ரணபாலி’ வரும் அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மீண்டும் இணைந்துள்ளதால் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் ஏற்கெனவே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading