13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்ஷன் இல்லாத கதையில் டாம் குரூஸ் – ‘டிக்கர்’ டிரெய்லர் வெளியீடு!

ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளைக் கூட டூப் இல்லாமல் செய்து உலக ரசிகர்களை வியக்க வைக்கும் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ். 63 வயதிலும் தனது படங்களில் சாகச காட்சிகளை தானே மேற்கொண்டு வரும் அவர், ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்கள் மூலம் சர்வதேச அளவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது.

டாம் குரூஸ் முதன்முதலில் சீக்ரட் ஏஜண்ட் ஈதன் ஹன்ட் கதாபாத்திரத்தில் நடித்த ‘மிஷன் இம்பாசிபிள்’ திரைப்படம் 1996-ம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, டாம் குரூஸ் மேற்கொண்ட அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இந்தத் தொடரின் முக்கிய அடையாளமாக மாறின. அந்த வரிசையில் வெளியான 8-வது பாகமான ‘மிஷன் இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்’ திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இப்படங்களின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அறியப்படும் டாம் குரூஸ், தற்போது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் அலெஜான்ட்ரோ இனாரித்து இயக்கியுள்ள ‘டிக்கர்’ திரைப்படத்தில் வயதான முதலீட்டாளராக அவர் தோன்றுகிறார். இதன் மூலம் சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்ஷன் இல்லாத கதைக்களத்தில் டாம் குரூஸ் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ‘டிக்கர்’ படத்தின் இறுதிக்கட்ட டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. உலகம் முழுவதும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading