விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில், இளம் நடிகர் ஏகன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படம் ‘ஹைக்கூ’. புத்துணர்ச்சியான காதல் கதையுடன் உருவாகியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மற்றும் வெளியீட்டு தேதி தற்போது வெளியாகியுள்ளது. கவித்துவமான காட்சிகளுடன் உருவாகியிருக்கும் டீசர் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைதளப் பக்கங்களில் டீசரை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டீசரில் இடம்பெறும் காதல் காட்சிகளுக்கு சித்து குமாரின் பின்னணி இசை கூடுதல் அழுத்தம் கொடுக்கிறது. கிளாசிக்கல் ராகங்களின் சாயலில் ஒலிக்கும் மென்மையான வயலின் இசையுடன் நவீன ஃபியூஷன் இசையும் இணைந்து, படத்தின் காதல் உணர்வுக்கு பொருத்தமான இசை அனுபவத்தை உருவாக்கியுள்ளது. குறுகிய நேரத்திலேயே வண்ணமயமான காதல் உலகத்திற்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் டீசர் அமைந்துள்ளது.
காதல், இசை மற்றும் அழகான காட்சியமைப்புகளுடன் உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
