வரவேற்பை பெறும் ‘இம்மோர்டல்’ – ஜிவி பிரகாஷுக்கு தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்!

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ‘இம்மோர்டல்’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவான இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஒரே வீட்டைச் சுற்றி நகரும் வகையில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. சில காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.இருப்பினும், விமர்சனங்களைத் தாண்டி வசூலில் படம் எதிர்பாராத வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை சுமார் ரூ.8 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமாக மாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு புதிய ஆர்எஸ் 100 ரக யமஹா இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading