தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘டிசி’. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த ஆக்ஷன் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சன் குழுமத் தலைவரும் தயாரிப்பாளருமான கலாநிதி மாறன், ‘டிசி’ படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நாயகன் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரை சந்தித்த அவர், மூவருக்கும் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 சொகுசு கார்களின் சாவிகளை வழங்கி கவுரவித்துள்ளார்.
