கிஷன் தாஸ் – சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கும் ‘சீ யூ’ படத்தின் ‘ஏகாந்தம்’ பாடல் வெளியீடு!

அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவஸ்டன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘சீ யூ’. காதலை மையமாகக் கொண்ட இப்படத்தில் கிஷன் தாஸ் கதாநாயகனாகவும், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஏஆர் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் டி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜுனம் இசையமைத்துள்ளார்.

‘ஆரோமலே’ திரைப்படத்தின் மூலம் கிஷன் தாஸ் சமீபத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்ததன் மூலம் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பிரபலமானார். இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் நடித்த ‘தக் லைப்’ படத்தில் உதவி இயக்குநராகவும் சஞ்சனா பணியாற்றியுள்ளார். மேலும், அவர் நடித்த ‘பரிமளா அண்ட் கோ’ திரைப்படமும் அண்மையில் வெளியானது.

‘இந்நிலையில் சீ யூ’ படத்தின் முதல் பாடலான ‘ஏகாந்தம்’ வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் , படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading