பிரபுதேவாவின் ‘மூன்வாக்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

1997-ம் ஆண்டு வெளியான ‘மின்சார கனவு’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து பிரபுதேவா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் ஒரு படத்திற்காக இணைந்துள்ளனர். ‘மூன்வாக்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ளார்.

பிரபுதேவா, ஏ.ஆர்.ரகுமான், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தன.

தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், ‘மூன்வாக்’ திரைப்படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதனிடையே பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள ‘பேங் பேங்’ திரைப்படமும் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ‘மூன்வாக்’ படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading