விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் அடுத்த படம்… வெளியான அப்டேட்!

நடிகர் சண்முக பாண்டியனின் நடிப்பில் உருவாகி வரும் ‘வாணவேடிக்கை’ படத்திற்கான பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு அடுத்ததாக அவர் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தை இயக்குநர் மணிசேயோன் இயக்குகிறார்.

தயாரிப்பு நிறுவனத்தின் 10-வது படமாக உருவாகும் இந்தப் புதிய முயற்சியில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தெரிவித்துள்ளது. மீதமுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.

முன்னதாக, திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தை எல்கே சுதீஷ் தயாரித்து வருகிறார். சரவணன், இயக்குநர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குநர் கிரண், ஜெயபிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.தற்போது சண்முக பாண்டியன் – மணிசேயோன் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. படப்பிடிப்பு தொடங்கிய பின்னர் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading