அஜித்தின் ரேசிங் ஆவணப்படமான ‘கிளாடியேட்டர்ஸ்’ – டிரெய்லர் அப்டேட்!

நடிகர் அஜித்குமார் சர்வதேச அளவில் பங்கேற்ற மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளையும், அவர் சந்தித்த அனுபவங்களையும் பதிவு செய்யும் விதமாக ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ரேசிங் போட்டிகளில் அஜித் எதிர்கொண்ட சவால்கள், பல்வேறு பின்னடைவுகள் மற்றும் கடினமான சூழ்நிலைகள் என அவரது பயணத்தின் முக்கிய தருணங்கள் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 2025-ம் ஆண்டு நடைபெற்ற துபாய் 24H பந்தயத்தில் போடியம் வென்று அவர் பதிவு செய்த சாதனையும் இதில் இடம்பெறுகிறது. அத்துடன் இந்தியாவின் முன்னணி ஃபார்முலா-1 வீரர் நரேன் கார்த்திகேயன், ஆதித்யா படேல், ஜூலியன் கெர்பி உள்ளிட்ட ரேசிங் துறையைச் சேர்ந்த பலரும் ஆவணப்படத்தில் தோன்றுகின்றனர்.

இந்நிலையில் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் டிரெய்லர் செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் தமிழ்நாட்டில் டிரெய்லர் திரையிடப்பட உள்ள திரையரங்குகளின் பட்டியலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும், ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் ரேசிங் வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களையும், அவர் கடந்து வந்த சவால்களையும் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading