விமல் -ஸ்ரேயா கூட்டணியில் உருவான ‘சண்டக்காரி’ திரைப்படம் … விரைவில் ரிலீஸ்!

லண்டனை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சண்டக்காரி’ திரைப்படம், காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட முழுநீள பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. ‘திரிஷ்யம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பின் கதையை அடிப்படையாகக் கொண்டு, ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

2012-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான மலையாளப் படமான ‘மை பாஸ்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. திலீப், மம்தா மோகன்தாஸ் நடித்த அந்தப் படத்தின் கதையை தமிழுக்கு ஏற்ற வகையில் உருவாக்கியுள்ள நிலையில், பிரபு மற்றும் சத்யன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதையின் மையம் லண்டனில் செயல்பட்டு வரும் பிரபல சாப்ட்வேர் நிறுவனம்தான். அங்கு உயர் அதிகாரியாக ஸ்ரேயாவும், அவரது நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியராக விமலும் நடித்துள்ளனர். பணியிடத்தில் இருவருக்கும் இடையே உருவாகும் கருத்து வேறுபாடுகள், மோதல்கள் எதிர்பாராத சம்பவங்களுக்கு வழிவகுக்கின்றன.ஒருபுறம் காதல், மறுபுறம் கோபம் மற்றும் ஈகோ என விமல் – ஸ்ரேயா கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவு பல்வேறு திருப்பங்களை சந்திக்கிறது. இவர்களுக்குள் தொடரும் இந்த ‘சண்டை’யை சுற்றியே படத்தின் முக்கியமான சுவாரஸ்யங்கள் அமைந்துள்ள இப்படம் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading