கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ முதல் பாடல் ‘மயில்வீரா’ வெளியீடு!

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தை பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகம் தற்போது உருவாகி வருகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்திற்கு கூடுதல் சிறப்பு உள்ளது. காரணம், அவரது இசைப்பயணத்தில் உருவாகும் 100-வது திரைப்படமாக ‘சர்தார் 2’ அமைந்துள்ளது. இதனால் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் பாடலாக ‘மயில்வீரா’ வெளியாகியுள்ளது. தமிழ் கடவுளான முருகனை மையமாகக் கொண்டு பக்தி உணர்வுடன் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஆஃப்ரோ, வாஹீசன் ராசையா, முகேஷ் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

மேலும், ‘மயில்வீரா’ பாடலின் வரிகளையும் ஆஃப்ரோ மற்றும் வாஹீசன் ராசையா இணைந்து எழுதியுள்ளனர். பக்தி மற்றும் நவீன இசை கலந்த பாடலாக வெளியாகியுள்ள இது, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதன் மூலம் ‘சர்தார் 2’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading