சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தை மதிமாறன் இயக்கியுள்ளார். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ மக்களின் வாழ்க்கையையும், அப்பகுதியில் நடைபெறும் படகுப் போட்டிகளையும் மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகர் சுஹாஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரபல டோலிவுட் நடிகர் சுஹாஸ், இப்படத்தில் முக்கிய வேடத்தில் இடம்பெற்றுள்ளார். இவர்களுடன் சத்யராஜ், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன், ஸ்டன்ட் சிவா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.
செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘மண்டாடி’ படத்திலிருந்து ஏற்கனவே ‘மண்டாடி மண்டாடி’, ‘உசுரே நீதான் புள்ள’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளன. இதனால் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் கதைக்களம் தொடர்பான காட்சிப்படுத்தல்கள், ‘மண்டாடி’ மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
