சூர்யாவின் 47வது படத்தை ‘ஆவேசம்’ புகழ் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் நஸ்ரியா, நஸ்லன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா போலீஸ் வேடத்தில் நடிப்பதால், படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்தப் படத்தின் கதைக்களம் தொடர்பாக தற்போது சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தில் விசாரணை அதிகாரியாக வரும் சூர்யா, ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்போது தனது பார்வையை இழக்கிறார் எனக் கூறப்படுகிறது. அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்து, அவர் முன்பு விசாரித்த அதே வழக்கு மீண்டும் அவரிடம் வருகிறது.
பார்வையற்ற நிலையில் அந்த வழக்கை சூர்யா எப்படி அணுகுகிறார் என்பதுதான் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் எனத் தெரிகிறது. இதனால் வழக்கமான போலீஸ் கதையாக இல்லாமல், வித்தியாசமான பின்னணியில் உருவாகும் படமாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
