மோகன்லாலின் அடுத்தடுத்த படங்கள்… முன்னணி இயக்குநர்களுடன் இணையும் லாலேட்டன்!

மலையாள சினிமாவில் மிகவும் பிசியாக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். அவர் சமீபத்தில் கதாநாயகனாக நடித்த ‘திரிஷ்யம் 3’, மம்முட்டியுடன் இணைந்த ‘பேட்ரியாட்’ மற்றும் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ‘தொடக்கம்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இதுதவிர, இந்தியில் உருவாகும் ‘ஹைவான்’ மற்றும் தமிழில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்களிலும் மோகன்லால் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘தொடரும்’ படத்தின் இயக்குநர் தருண் மூர்த்தியின் இயக்கத்தில் ‘அதிமனோகரம்’ என்ற புதிய படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

இதற்கிடையே, தனது அடுத்தடுத்த மலையாளப் படங்கள் குறித்த புதிய அறிவிப்புகளை மோகன்லால் வெளியிட்டுள்ளார். அதில் பிரியதர்ஷன் இயக்கும் திரைப்படம் அவரது 100வது படமாக உருவாக உள்ளது. இதனுடன், மலையாள சினிமாவின் மூத்த இயக்குநரான சத்யன் அந்திக்காடு இயக்கும் புதிய படத்திலும், மேலும் சத்யன் அந்திக்காட்டின் மகன் அனூப் சத்யன் இயக்கும் படத்திலும் மோகன்லால் நடிக்கவுள்ளார். மோகன்லாலின் மகளை வைத்து சமீபத்தில் படம் இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப்புடனும் அவர் இணையவுள்ளார். இதுமட்டுமின்றி நடிகரும் இயக்குநருமான திலீஷ் போத்தன், ‘மேப்படியான்’ இயக்குநர் விஷ்ணு மோகன் ஆகியோரின் இயக்கத்திலும் மோகன்லால் நடிக்க உள்ளார். இந்த அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading