இளையராஜா இசையில் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ – விரைவில் முதல் பாடல்!

தமிழ் சினிமாவில் முன்னணிஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ரெட்ரோ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 10-வது திரைப்படத்திற்கு ‘டோரதி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மதுரையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருவது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. நவீன மற்றும் ஸ்டைலான திரைமொழிக்கு பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜின் படைப்புடன் இளையராஜாவின் இசை எவ்வாறு இணைந்திருக்கிறது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில், இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் ‘ராஜா சம்பவம்’ என குறிப்பிட்டு, படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக இருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading