பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் பாலாஜி மோகன்!

தமிழில் தனக்கென ஒரு தனித்துவமான இயக்குநர் அடையாளத்தை உருவாக்கிய பாலாஜி மோகன், தற்போது தனது அடுத்த பயணத்தை பாலிவுட்டில் தொடங்கியுள்ளார். ‘காதலில் சொதப்புவது எப்படி’ மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், அதன்பிறகு தனுஷை வைத்து ‘மாரி’, ‘மாரி 2’ ஆகிய படங்களை இயக்கினார்.

இந்தப் படங்களுக்குப் பிறகு அவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்கள் வெளியாகவில்லை. அதேசமயம், யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ திரைப்படத்தைத் தயாரித்தார். சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் தோன்றிய பாலாஜி மோகன், தற்போது யாருக்கும் பெரிய அறிவிப்பு இல்லாமல் ஹிந்தியில் ஒரு திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

‘நயே நவேலி’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் யாமி கவுதம் கதாநாயகியாக நடித்துள்ளார். பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தனுஷின் பாலிவுட் படங்களில் பணியாற்றிய இயக்குநர்களில் ஒருவரான ஆனந்த் எல். ராய் இப்படத்தைத் தயாரித்துள்ளார். பாலாஜி மோகனின் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 16ஆம் தேதி ‘நயே நவேலி’ திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading