கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் மாதவன், பிரியாமணி, துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர் கில்லி சரத் உள்ளிட்டோர் பார்த்தனர். திரைப்படத்தைப் பாராட்டிய அவர்கள், “ஜி.டி.என் ஒரு அற்புதமான படைப்பு. இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான திரைப்படமாக இது அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இப்படத்தை பார்த்து, ஜி.டி. நாயுடுவின் சாதனைகள் மற்றும் வாழ்க்கைப் பயணத்தில் இருந்து உத்வேகம் பெற வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களை ‘ஜி.டி.என்’ படத்தைப் பார்க்க அழைத்துச் செல்லுமாறு தமிழ்நாடு அரசிடம் அதிகாரப்பூர்வமாக பரிந்துரை செய்ய உள்ளேன். இதன் மூலம் ஜி.டி. நாயுடுவின் உத்வேகம் அளிக்கும் வாழ்க்கைக் கதை மாநிலம் முழுவதும் உள்ள இளம் தலைமுறையினரை சென்றடைய வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
Add a Comment
