விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மு. மாறன் இயக்கியுள்ள இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, குழந்தை நட்சத்திரம் லிதன்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டு ஆக்ஷன் கலந்த குடும்பப் படமாக இது உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் பகவதி பெருமாள், ஹரிப்ரியா, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். முதலில் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், அதற்கு முந்தைய நாளில் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ வெளியாகவுள்ளதால் வெளியீட்டுத் தேதி மாற்றப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ‘அப்பா குட்டி’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான புதிய வெளியீட்டுத் தேதியுடன் கூடிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. புதிய தேதியில் வெளியாகவுள்ள
